இரண்டு நாள் சரிவை தொடர்ந்து இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை.!

தங்கம் விலை: கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.880, ரூ.800 என குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (25-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,655க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.96க்கும், கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (24-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.96.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.96,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025