சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,405-க்கும், ஒரு சவரன் ரூ.67,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.62,320-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.7,705-க்கும், சவரன் ரூ.61,640-க்கும் விற்பனையாகிறது.
பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு எதிரொலியால் விலை சரிவைக் கண்டுள்ளதாகவும், மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை நேற்று முதல் குறையலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று விடுமுறை நாள் என்பதால் சந்தை இல்லை. இதனால் வாரத் தொடக்க நாளான இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. அதே நேரம், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,405-க்கும், ஒரு சவரன் ரூ.67,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை பொறுத்தவரையில் இன்று எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.