தொடர்ந்து உச்சம் காணும் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,449-க்கும், ஒரு சவரன் ரூ. 67,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த 1 ஆம் தேதி ரூ.7,150ஆக இருந்தது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை ரூ.57,200ஆக இருந்தது. இந்த விலை கடந்த ஒரு மாதமாக மளமளவென அதிகரித்து வந்தது.
மாத கடைசி நாளான நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,730ஆக உயர்ந்தது, அதாவது கிராமுக்கு ரூ.580 அதிகரித்தது. மேலும் சவரனுக்கு ரூ.4,640 உயர்ந்து ரூ.61,840ஆக விற்பனையானது. தற்பொழுது, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.62 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
அதன்படி, இன்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.7,745க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், சவரன் தங்கம் ரூ.62 ஆயிரத்தை முதல்முறையாக நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல, வெள்ளியின் விலை பொறுத்தவரையில் இன்று எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,449-க்கும், ஒரு சவரன் ரூ. 67,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.