தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.
சென்னையில் 1 கிராம் தங்கம் நேற்று ரூ.7,260க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.25 உயர்ந்து ரூ.7,285க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.58,280க்கு விற்கப்படுகிறது.
அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.101ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1,01,000ஆகவும் விற்கப்படுகிறது.