தொடர்ந்து உயரும் தங்கம் விலை …. சவரனுக்கு ரூ.232 உயர்வு..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34,136-க்கு விற்பனை, கிராமிற்கு தங்கம் ரூ.4,267-க்கு விற்பனை.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
ஆம் இன்றயை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.34,136-க்கு விற்பனை. ஒரு கிராமிற்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,267-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் சென்னையில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.70,000-க்கு, விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
April 13, 2025