தொடர்ந்து தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் ரூ.480 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, ஒரு நாட்டில் தங்கம் வெட்டி எடுக்கும் அளவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி, உள்நாட்டு தேவை மற்றும் நுகர்வோர் முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது.
அதன்படி, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
சென்னையில் இன்று (06. 02. 2024) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.46,640-க்கும் , கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,830க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.76க்கும், கிலோ வெள்ளி ரூ.700 குறைந்து ரூ. 76,000க்கும் விற்பனையாகிறது.
இன்று அறிமுகப்படுத்தப்படும் “பாரத் அரிசி” திட்டம்..!
சென்னையில் நேற்றைய தினம் (05. 02. 2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,850க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 1 கிராம் 76 ரூபாய், 70 காசகளுக்கும், கிலோவுக்கு ரூ.300 சரிந்து 1 கிலோ 76,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.