தொடர் சரிவை காணும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்தவாரம் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
(01.11.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கும், கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,686க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனையாகிறது.
(31.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5,715 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரண் 45,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் 78 ரூபாய் 20 காசுகளுக்கும், 1 கிலோ 78,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.