காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,749-க்கும், ஒரு சவரன் ரூ.69,992-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3 மணி நேரத்தில் ரூ.320 அதிகரித்து தற்போது 64,480க்கு விற்பனை ஆகிறது. காலையில் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 மணி நேரத்தில் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை :

ஆபரணத் தங்கத்தின் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.45 குறைந்து ரூ.8,020க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.360 சரிந்து ரூ.64,160க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று மதியம் :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.64 ஆயிரத்து 480க்கும், ஒரு கிராம் ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம்

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,749-க்கும், ஒரு சவரன் ரூ.69,992-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.107க்கு விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.1.07 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.108க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1.08 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update