இறங்கிய வேகத்தில் எகிறும் தங்கம் விலை.! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு.!
சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களுக்கு முன், ரூ.47 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நிலையில், இப்பொது சற்று குறைந்து ரூ.46 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுது. ஆனால், கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் (17. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.46,240க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.78க்கும், ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகள் முடக்கம்..!
சென்னையில் (16. 02. 2024) நேற்றைய நிலவரப்படி,22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,080-க்கும் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய்க்கும், 1 கிலோ 77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.