வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு!
கடந்த சில நாட்களாக தங்கம் விதை குறைந்து விற்பனை ஆன நிலையில், வார தொடக்க நாளான இன்றும் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,495க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.76- க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிலோ வெள்ளி ரூ. 76,000- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றய நிலவரப்படி, தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை, ஒரு கிராம் 76 ரூபாய் 20காசுகளுக்கும், ஒரு கிலோ 76,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.