தொடக்க நாளில் உச்ச தொட்ட தங்கம் விலை…சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

gold rate today

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.25 உயர்ந்திருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாரத்தின் தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.200உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் இந்த விலை உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களில் ரூ.1,440 உயர்ந்திருக்கிறது.

சென்னையில் (27.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,240க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,780க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.81.50க்கும், கிலோ வெள்ளி ரூ.81.500க்கும் விற்பனையாகிறது.

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..!

(26.11.2023) நேற்றைய நிலவரப்படி, விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,040க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,755க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.20க்கும், கிலோ வெள்ளி ரூ.82,000க்கும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்