Gold Price : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன ?
Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :- அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.! இன்று விசாரணை…
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் (29. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து 30காசுகள் உயர்ந்து ரூ.75.70-க்கும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.75,700-க்கும் விற்பனையாகிறது.
Read More :- எச்சரிக்கை.! திமுக காணாமல் போகுமா.? பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.!
சென்னையில் (28. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,480 க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,810 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம், வெள்ளியின் விலை மாற்றமும் இல்லாமல் அதே விலையான நேற்றைய விலைக்கே ரூ.75.40-க்கும், கிலோவுக்கு ரூ.75,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.