3-வது நாளாக உயரும் தங்கம் விலை..! வருத்தத்தில் இல்லத்தரிசிகள் ..!
தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது.
இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது அடுத்த இரண்டு நாட்களுக்கு சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 6,460-க்கும் விற்பனையாகிறது. ஆனால் மறுபக்கம், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு குறைந்து ரூ.91-க்கும், கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (01-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 6,430-க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூ.91.70-க்கும், கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.91,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.