Gold Price : இது என்னப்பா ..! குறையுமா குறையாதா ..? 3-வது நாளாக உயரும் தங்கம் விலை ..!
Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :- மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா?
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். நேற்று வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதே நிலையில், இன்றும் விலை இறங்காமல் நேற்றைய விலையிலுருந்து உயர்ந்தே விற்கப்படுகிறது.
சென்னையில் (08.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,090-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் நேற்றைய விலையிலிருந்து ரூ.0.50 காசுகள் உயர்ந்து ரூ.78.50-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.500 உயர்ந்து ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது.
Read More :- சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம்…அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி முதல்வர்.!
சென்னையில் (07.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,320-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் ரூ.0.20 காசுகள் குறைந்து ரூ.78.00-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.200 குறைந்து ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.