Gold Price : வாரத்தின் முதல் நாளில் குறைந்த தங்கத்தின் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?
Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :- மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்ட நிலையில். தற்போது தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் (04.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.47,440-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,930-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை விலைமாற்றமன்றி கிராமுக்கு ரூ.77 -க்கும், கிலோவுக்கு ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
Read More :- நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி…
சென்னையில் (03.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குரூ.47,520-க்கும், கிராமுக்கு ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் ரூ.77.00-க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.