அடேங்கப்பா!! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? இல்லத்தரசிகளுக்கு ஷாக்..
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,623-க்கும், ஒரு சவரன் ரூ.68,984-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது, இது நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கம் வாங்குவது வெறும் கனவாகவே போய்விடுமோ என நெட்டிசன்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.5) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.95 உயர்ந்ததால் ஒரு கிராம் ரூ.7,905க்கு விற்கப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை பொறுத்தவரையில் இன்று 1 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.