Categories: வணிகம்

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.!

Published by
கெளதம்

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, நேற்று ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை ரூ.46,800 ஆக இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் (02.12.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 47,320-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகிறது. அதேபோல். ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.83.50க்கும், கிலோ வெள்ளி ரூ.83,500க்கும் விற்பனையாகிறது. இதனால், வாடிக்கையாளர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு!

சென்னையில் நேற்று (01.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,850க்கும் விற்பனையானது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.82.50க்கும், 1 கிலோ ரூ.82,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

14 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

15 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

17 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

19 hours ago