தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு… இன்றைய நிலவரம்.!
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,560-க்கும், கிராமுக்கு ரூ.7,820 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,315 க்கு விற்பனையாகிறது.
அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,560-க்கும், கிராமுக்கு ரூ.7,820 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.