வாரத்தின் தொடக்க நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை …! எவ்வளவு தெரியுமா?

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வார தொடக்கத்தில் சற்று உயர்வை கண்ட தங்கம் விலை, வாரத்தின் கடைசி 2 நாட்களாக சற்று குறைந்து விற்கப்பட்டது.
அதன்படி சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.54,440-க்கு விற்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய நிலவரப்படி (15-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கும், கிராமிற்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,785-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு சவரன் வெள்ளி விலை ரூ.2.40 பைசா குறைக்கப்பட்டு ரூ.797.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (12-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,440-க்கும், கிராம் ரூ.6,805-க்கும் விற்பனை ஆனது. அதே சமயம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025