சரிய தொடங்கியது தங்கம் விலை! ஒரு சவரன் ரூ. 29,272

இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 29,272 -க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை கொண்டுதான் உள்ளது.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாயை தொட்டது .இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது.1 சவரன் தங்கம், ரூ. 29,272-க்கு விற்பனையாகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.12 உயர்ந்து, ரூ.3659-க்கு விற்பனையாகிறது.இதனையடுத்து வெள்ளி விலை ரூ.31 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51 -க்கு விற்பனையாகிறது.