உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூபாய் 280 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (24-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,432 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,304 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.93.00க்கும், ஒரு கிலோ ரூ.93,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
