Gold Price : வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?
Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :- பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் (05.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,015-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் நேற்றைய விலையிலிருந்து ரூ.1.20 காசுகள் உயர்ந்து ரூ.78.20-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.1200 அதிகரித்து ரூ.78,200-க்கும் விற்பனையாகிறது.
Read More :- ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
சென்னையில் (04.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,440-க்கும், கிராமுக்குரூ.5,930-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் ரூ.77.00-க்கும், கிலோவுக்கு ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை கிராமிற்கு 6 ஆயிரம் ரூபாய் தொட்டது இதுவே முதல் முறையாகும். கூடிய விரைவில் ஒரு சவரன் தங்கமும் 60 ஆயிரத்தை தொட்டு விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.