தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை..!!
- சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,840க்கு விற்பனை.
- தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,605 க்கு விற்பனை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வை சந்தித்தது. தொழில்துறையில் நிலவிய தேக்கம் முதலீட்டாளர்களை தங்கத்தின் மீது முதலீடுகளை அதிகரிக்க வைத்தது.
தற்போது மீண்டும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் நிலவுவதால் தங்கம் விலை தினம் தினம் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.
இந்நிலையில் இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,605-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.