பட்ஜெட்டால் தங்கம் இறக்குமதி குறைவு !
இந்த ஜனவரியில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்தியா உலகிலேயே மிகப்பெரிய அளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தை சீனா பெற்றுள்ளது. வழக்கமாக முன்னணியில் இருக்கும் இந்தியாவின் தங்க இறக்குமதி இந்த ஆண்டு ஜனவரியில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் தங்க இறக்குமதி 47 புள்ளி ஒன்பது டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 30 டன்னாக அதாவது 37 சதவீதம் குறைந்திருந்தது.
தங்க இறக்குமதிக்கு இந்த பட்ஜெட்டில் வரி குறையும் என்ற எதிர்பார்ப்பில், தங்க வர்த்தகர்கள் இறக்குமதியைத் தள்ளி வைத்திருந்தனர். எனினும் கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.