உலக அளவிலான தங்க முதலீட்டுக்கான தேவை குறைவு !
உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதில், உலக அளவிலான தங்க முதலீட்டுக்கான தேவை கடந்த ஆண்டில் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ம் ஆண்டில் தங்க முதலீட்டுக்கான தேவை, ஆயிரத்து 595 மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும், அது கடந்த ஆண்டில் ஆயிரத்து 232 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளது.
அதே போல் 2016ம் ஆண்டு தங்கம் சார் பரிவர்த்தனை வர்த்தகம் 546 புள்ளி 8 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு அது 202 புள்ளி 8 மெட்ரிக் டன்னாக சரிந்தது எனவும் உலக அளவில் தங்க கட்டி மற்றும் தங்க காசுக்கான தேவை ஒவ்வொரு வருடமும் 2 சதவீதம் குறைந்து வருவதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.