மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு 46,101கோடி ரூபாய் முதலீடு!
46ஆயிரத்து நூற்று ஒரு கோடி ரூபாய், பொதுத்துறை வங்கிகளின் முதலை அதிகரிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் தொகையில் அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கிக்கு எட்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாயும், பஞ்சாப் நேசனல் வங்கிக்கு ஐயாயிரத்து 473கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன.
பரோடா வங்கிக்கு ஐயாயிரத்து 375கோடி ரூபாயும், சென்ட்ரல் வங்கிக்கு நாலாயிரத்து 835கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன. யூனியன் வங்கிக்கு நாலாயிரத்து 524கோடி ரூபாயும், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்சுக்கு மூவாயிரத்து 571கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன.
தேனா வங்கிக்கு மூவாயிரத்து 45கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கிக்கு இரண்டாயிரத்து 839கோடி ரூபாயும் கார்ப்பொரேசன் வங்கிக்கு இரண்டாயிரத்து 187கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் வங்கிகள் அதற்குச் சமமான பங்குகளை அரசுக்கு வழங்க உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.