சுஷாந்த் சிங் போட்டோ பதிவிட்டு, சிக்கலில் மாட்டிக்கொண்ட ஃபிளிப்கார்ட்.!

Default Image

ஃபிளிப்கார்ட்  தளத்தில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ பதிவிட்டு Depression (மனஅழுத்தம் ) என எழுதி இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்தியாவில் மிக பிரபலமாக இயங்கி வரும் ஷாப்பிங் தளங்களில் மிக முக்கியமானது ஃபிளிப்கார்ட் இந்த தளத்தின் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல், ஆடை அணிகலன்கள் , உணவு தயாரிப்பு பொருட்கள் என எண்ணற்றவை கிடைக்கிறது.

இதில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், பதிவிடப்பட்ட போட்டோவில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ அந்த டி-ஷர்ட்டில் பதிவிட்டு, அதில் Depression (மனஅழுத்தம் ) எனஎழுதி இருந்தது.

இறந்து போன சுஷாந்த் சிங் ராஜ்புட், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தான் கூறப்பட்டு வந்தது.  இதனை குறிப்பிடும் வகையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டதால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஃபிளிப்கார்ட்  மீது தங்கள் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

அது, இணையத்தில் எதாரொளித்தது. இணையத்தில் ஃபிளிப்கார்ட்டிற்கு எதிரான டேக்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும், இந்த புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்