இந்திய அளவில் வீட்டுமனை,ரியல் எஸ்டேட் மிகவும் வருமானம் உள்ளதாகவும் ,விலை அதிகமாகவும் உள்ள துறை ஆகும்.எனவே சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மனைகளின் மதிப்பு சரிந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது .
சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நைட் பிரான்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தியதால் இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக புனேவில் வீட்டு மனைகளின் விலை 7 விழுக்காடு குறைந்துள்ளது. வாங்கும் ஆர்வம் குறைந்ததால் சென்னையிலும் வீட்டுமனைகளின் விற்பனை 20 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.
எனினும் 50 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை விற்கும் நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்துள்ளன, பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற மக்கள் விரும்புவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை கொடி கட்டிப்பறந்த 2010ம் ஆண்டில் நாடுமுழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 3 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளே கட்டப்பட்டுள்ளன.
source: dinasuvadu.com
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…