வணிகம்

ஐந்தாவது நாள் பங்குச்சந்தை முடிவு.! 600 புள்ளிக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.!

Published by
செந்தில்குமார்

இந்தியா பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றன. அதன்படி, கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் கடந்த நான்கு நாட்களிலும் சரிவுடனே வர்த்தகமானது.

இந்த சரிவினால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். இதனை ஈடு செய்யும் விதமாக இன்றைய வர்த்தக நாள் ஆனது முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்ந்து வர்த்தகமாகி வந்தது.

இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகள் ஏற்றமடைந்தன. அதேபோல நிஃப்டி 19,000 புள்ளிகளை கடந்தது, தற்பொழுது ஐந்தாவது வர்த்தக நாள் ஆனது நிறைவடைந்துள்ள நிலையில், 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 634.65 புள்ளிகள் உயர்ந்து 63,782.80 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 190.00 புள்ளிகள் உயர்ந்து 19,047.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.03 டாலர் விலை உயர்ந்து 89.96 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 143.00 அல்லது 2.06% உயர்ந்து ரூ.7,088 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் 30 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் உயர்ந்துள்ளன.

அதன்படி, ஆக்சிஸ் பேங்க், எச்சிஎல் டெக்னாலஜிஸ்,  டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளன ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

12 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1 hour ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

3 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago