உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத சரிவு அடைந்துள்ளது.
நவம்பர் மாதம் வரை நடக்கவிருக்கும் நடப்பு இரண்டாம் காலாண்டில் வணிக நிலைமைகள் மேலும் பலவீனமடையும் என எதிர்பார்ப்பதாக FedEx தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு 21% க்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அந்நிறுவனம் $11 பில்லியன் இழந்துள்ளது.
இந்த காலாண்டில் உலகளாவிய வருவாய் ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சமமாக இருக்கும் என்றாலும், FedEx இன் வருவாய் 40% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாபம் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
உலகளாவிய அளவில் ஏற்றுமதியின் தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. எனவே ஃபெடெக்ஸ் நிறுவனம் தனது நடப்பு ஆண்டுக்கான மூலதனச் செலவுகளை $500 மில்லியன் குறைத்து $6.3 பில்லியனாக குறைத்தது.
மேலும் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஃபெடெக்ஸ் நிறுவனம் 90 அலுவலக இடங்கள் மற்றும் ஐந்து கார்ப்பரேட் அலுவலகங்களை மூடுவதாகவும் அறிவித்தது. புது பணியாளர்களை எடுக்கும் முயற்சிகளை ஒத்திவைப்பதாகவும், விமானங்களைக் குறைப்பதாகவும், கூறியுள்ளது.
ஃபெடெக்ஸ் ஸின் வருவாயும் “வால் ஸ்ட்ரீட்” எதிர்பார்ப்புகளை விடக் குறைவாகவே வந்துள்ளது. இதன் காரணமாகவே அந்நிறுவனத்தின் ஷேர் மதிப்புகள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…