ரூ.876,586,700,000 இழந்த ஃபெடெக்ஸ் 40 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத சரிவு

Default Image

உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத சரிவு அடைந்துள்ளது.

நவம்பர் மாதம் வரை நடக்கவிருக்கும் நடப்பு இரண்டாம் காலாண்டில் வணிக நிலைமைகள் மேலும் பலவீனமடையும் என எதிர்பார்ப்பதாக FedEx தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு        21% க்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அந்நிறுவனம் $11 பில்லியன் இழந்துள்ளது.

இந்த காலாண்டில் உலகளாவிய வருவாய் ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சமமாக இருக்கும் என்றாலும், FedEx இன் வருவாய் 40% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாபம் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

உலகளாவிய அளவில் ஏற்றுமதியின் தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. எனவே ஃபெடெக்ஸ் நிறுவனம் தனது நடப்பு ஆண்டுக்கான மூலதனச் செலவுகளை  $500 மில்லியன் குறைத்து $6.3 பில்லியனாக குறைத்தது.

மேலும் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஃபெடெக்ஸ் நிறுவனம் 90 அலுவலக இடங்கள் மற்றும் ஐந்து கார்ப்பரேட் அலுவலகங்களை மூடுவதாகவும் அறிவித்தது. புது பணியாளர்களை எடுக்கும் முயற்சிகளை ஒத்திவைப்பதாகவும், விமானங்களைக் குறைப்பதாகவும், கூறியுள்ளது.

ஃபெடெக்ஸ் ஸின் வருவாயும் “வால் ஸ்ட்ரீட்” எதிர்பார்ப்புகளை விடக் குறைவாகவே வந்துள்ளது. இதன் காரணமாகவே அந்நிறுவனத்தின் ஷேர் மதிப்புகள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest