வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
கடந்த 2020 – 2021ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கடந்த 2020 – 21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
- அதன்படி,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அவ்வாறு,தணிக்கை தேவைப்படாத தனி நபர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், ‘ஐ.டி.ஆர் – 1 அல்லது ஐ.டி.ஆர் – 4’ படிவங்களில், ஆண்டுதோறும்,ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
- வருமானத்திற்குத் தணிக்கை தேவைப்படும் நிறுவனங்களுக்கு,வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அந்த வகையில்,நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடர்பான, ‘படிவம் 16’-ஐ ஜூலை 15 ஆம் தேதிக்குள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும்,வருமான வரி கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.