ஏற்றுமதியில் எருமை இறைச்சி 1.96 லட்சம் டன்னாக உயர்வு!
நம் நாட்டில் பசு, காளை மாடு மற்றும் கன்று இறைச்சிகளை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் எருமை மாட்டு இறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எலும்புடன் கூடிய எருமை மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் தெலுங்கு ஆகிய மாநிலங்கள் இறைச்சி உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த வருட கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் எருமை இறைச்சி 1.97 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதே கடந்த ஆண்டு 1.95 டன் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. அளவு அடிப்படையில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதத்தில் 16,896 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 22, 326 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதியில் 24 சதவீதம் குறைந்துள்ளது.