இன்றும் தங்கம் விலை சரிவு..,மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
சென்னையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80குறைந்து விற்பனை.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, நேற்றுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, 44,360க்கும், கிராம் ரூ5,545க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றயை நிலவர படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ.5.535க்கும், ஒரு சவரன் ரூ.44,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80க்கும் கிலோவுக்கு ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.