இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் தற்போது அது குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து அறிக்கையாக வழங்கும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களால், வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, வரும் நிதியாண்டிற்கான பல்வேறு கொள்கைத் திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 5 மாநிலங்கள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 70 சதவீத பங்கை வகிக்கின்றன என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஜிஎஸ்டி பதிவு தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிர, உத்தரப்பிரதேச மாநிலங்களில்தான் பெரும் எண்ணிக்கையில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…