பட்ஜெட் 2024 : அதிரடியாக குறைந்த தங்கம் விலை ..! எவ்வளவு தெரியுமா?
மத்திய பட்ஜெட் : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடரில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. அதில் முக்கிய அறிவிப்பாக தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான சுங்க வரி 6% சதவீதம் ஆக குறைக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் எதிரொலியாக அடுத்த சில மணி நேரத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்தது. இதனால் மக்கள் குறிப்பாக இல்லத்தரிசிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதாவது மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 % சதவிகிதத்தில் இருந்து 6 % சதவிகிதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12% சதவிகிதத்தில் இருந்து 6.4 % சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதனால், இன்று (23-07-2024) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும்,, ஒரு சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து 52,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்குக்கு ரூ.3.50 குறைந்து ரூ.88க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல சென்னையில் நேற்றைய நிலவரப்படி (22-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,600-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,825க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்பது என்பது குறிப்பிடத்தக்கது.