இன்றைய (30.12.2023) தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
அந்த வகையில், தங்கம் விலை இன்றைய தினம் எந்த வித மாற்றமின்றி விற்பனை ஆகி வருகிறது, தங்கம் வாங்க காத்திருப்போருக்கு இது ஒரு நல்ல வாய்ப்புக்காக அமைந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,910 ரூபாய்க்கும், சவரன் 47,280 ரூபாய்க்கும் விற்பனையானது.
எகிறும் புதிய கொரோனா: தமிழக எல்லையில் கொரோனா பரிசோதனை தீவிரம்!
சென்னையில் இன்று (30. 12. 2023) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 5,910 ரூபாய்க்கும், சவரன் 47,280 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஆனால், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 80 ரூபாய்க்கும், கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.