தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு, சவரனுக்கு ரூ.55,000ஐ தொட்ட நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது.

சென்னை : தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாகச் சவரனுக்கு ரூ.250 வீதம் குறைந்துவந்த நிலையில், இன்று மேலும் ரூ.200 குறைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி (19.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,600க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,825க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி, கிராமுக்கு ரூ.96க்கும், கிலோவுக்கு ரூ.96,000க்கும் விற்கப்படுகிறது.