அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னை : நேற்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை கிராம் ஒன்றிக்கு 2 ரூபாய் குறைந்து, கிராமுக்கு ரூ.100-க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000க்கும் விற்பனையாகிறது.