அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.!சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

Gold Price

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், கடந்த நான்கு நாட்களாக இறக்கம் கண்டுவந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

சென்னையில் இன்று (19. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு சவரன் ரூ.46,240க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.46,480 என்று விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,810 என்று தங்கம் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…

சென்னையில் நேற்றைய தினம் (18. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் 30 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5,780 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,240 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய்க்கும், 1 கிலோ 77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)