உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.. புதிய விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை : எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றம் செய்யப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,817 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு சமீபத்திய விலை உயர்வு வந்துள்ளது. கடந்த 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,809க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களாக ரூ.151 வரை குறைந்த நிலையில், இம்மாதம் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.818.50ஆக உள்ளது.
டெல்லியில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ.1652.50 ஆக உள்ளது, இது ரூ.1646-ல் இருந்து ரூ.6.50 உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.8.50 அதிகரித்து விலை ரூ.1764.50 ஆக உள்ளது. மும்பையில் புதிய விலை ரூ.1605 ஆகவும் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025