தீபாவளிக்கும் தங்கம் விலை ரூ.41,000 வரை உயரலாம்! தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பலனளிக்கும்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, உள்நாட்டு சந்தையில், இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. தற்போது 24 கேரட் தங்கம் 10 கிராம், ஜிஎஸ்டி விலையுடன் ரூ.40,000-ஐ தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், உள்நாட்டு சந்தையில், தங்கம் விற்பனையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. தங்க விலை உயர்வால், பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்யும் முறை தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் விலை உயர்வு காரண்மாக, தங்கத்தின் மறுசுழற்சி 70- சதவிகிதம் அதிகரித்துள்ளது. விற்பனை 65 சதவிகிதமாக குறைந்துள்ளது என ஜூவல்லர்ஸ் சம்மேளனத்தின் தலைவர் ராகேஷ் ஷெட்டி கூறியுள்ளார். மேலும் தீபாவளி வரை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.41,000 வரை செல்லலாம் என்றும், எனவே தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பலனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.29,832-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி ஒரு கிலோ ரூ.46742-க்கு விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025