சீன செயலி மூலம் கடன் வசூலித்த விவகாரத்தில் சிக்கிய பேடிஎம், கேஸ்ஃப்ரீ உள்ளிட்ட செயலிகளின் 46.67 கோடி ரூபாய் நிதி அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்தவர்கள் உருவாக்கிய செயலி மூலம், இந்தியர்களுக்கு கடன் வழங்கி அதிக வட்டியுடன் வசூல் செய்த புகாரின் பெயரில் பேடிஎம், கேஷ் ஃப்ரீ உள்ளிட்ட செயலிகள் சிக்கின.
சீன செயலி மூலம் இவர்கள் கடன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு சைபர் கிரைம் பிரிவினர் இந்த நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மொத்தமாக 18 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் சீன செயலி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டன. சீன செயலிகள் அனைத்தும் சீனாவில் உள்ள சர்வர் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததும் தெரியவந்தது.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, பேடிஎம், கேஷ்ஃப்ரீ உள்ளிட்ட நிறுவனங்களின் 46.67 கோடி நிதியை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…