பெட்ரோல் மற்றும் டீசல்,ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!

Published by
Edison
  • பெட்ரோல் மற்றும் டீசல்,ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
  • ஆனால்,இதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக குஜராத் அரசு மற்றும் ஐ.ஓ.சி. இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று காந்திநகரில் நடைபெற்றது.

அதில்,மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார்.

அதன்பின்னர்,எரிபொருள் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர்  கூறியதாவது:

  • பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்,சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டாலர்களுக்கு மேல் அதிகரித்ததே ஆகும்.மேலும்,நாம் நமது எண்ணெய் தேவையில் 80 சதவீதம் வரை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு நம்முடைய நுகர்வோருக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது,சர்வதேச சந்தையால் கட்டுப்படுத்தப்படுகிறது.இருப்பினும்,பெட்ரோலும்,டீசலும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது எனது கருத்தாக உள்ளது.ஆனால்,இதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

15 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

15 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

15 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

16 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

16 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

17 hours ago