எண்ணெய் நிறுவனங்களுக்கு தீபாவளி ஆஃபராக ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!..
தீபாவளி ஆஃபராக எல்பிஜி மீது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொது மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு(LPG) விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன்(IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) ஆகியவற்றின் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மத்திய அரசு இதற்கான இழப்பீட்டுத்தொகையாக ரூ.22,000 கோடியை வழங்க முடிவு செய்துள்ளதால் தொடர்ந்து விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் வந்த பொதுமக்களின் பாரம் குறையும். மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் (நவ 2021-மார்க் 2022) ஏற்பட்டுள்ள பெரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக ரூ.22,000 கோடியை வழங்க உள்ளது.
Cabinet approves Rs. 22,000 crore as one time grant to PSU OMCs for losses in Domestic LPG
It will help the PSU OMCs to continue their commitment to the Atmanirbhar Bharat Abhiyaan, ensuring unhindered domestic LPG supplies.#CabinetDecisions
— Satyendra Prakash (@DG_PIB) October 12, 2022