மாறன் சகோதரர்களை விடுவிக்கக் சி.பி.ஐ மறுப்பு !
சி.பி.ஐ., பி.எஸ்.என்.எல். சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்கக் கூடாது என தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது சன் டிவிக்கு சட்டவிரோத தொலைபேசி இணைப்புகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக பதவியேற்றபோது அளித்த உறுதிமொழிக்கு மாறாக செயல்பட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் கலாநிதிமாறன் மற்றும் சன் டிவி ஊழியர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், அரசை ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விடுவிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி நடராஜ், அன்றைய தினம் இரு தரப்பினரும் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.