ரேட் எகுறுவதற்குள் வாங்கிருங்க..! இன்றைய தங்கம் விலை நிலவரம் ..!
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரத்தில் அந்த 4 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.3,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 22-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.54,600க்கு விற்பனையான நிலையில், 4 நாட்களாக தொடர்ந்து சரிந்து ரூ.51,320க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் நேற்றைய நிலவரப்படி (27-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,720க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,465க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே போல வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (28-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.51,720-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,465-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் வெள்ளியின் விலையும் நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.89க்கு விற்பனை செய்யப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் வாரத்தில் தங்கத்தின் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.