இன்று பட்ஜெட் தாக்கல்! உயர்வில் பங்குச்சந்தை!
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யதுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்காரணமாக பங்குச்சந்தை ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதனையடுத்து, மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தகத்தின்போது, 114 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியுள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு காரணமாக பங்குசந்தையில் ஏற்றம் காணப்படுவதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.