பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ம்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 746.15 புள்ளிகள் உயர்ந்து 77,505.96 எனவும் நிறைவு பெற்றுள்ளன.

stock market budget 2025

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த ஆண்டு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சனிக்கிழமை என்பதால் வர்த்தகம் நடக்கும்போதும், பங்குச்சந்தையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், சிறிய அளவிலான ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.

ஏனென்றால்,  இன்று பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கி முடிவடைந்திருக்கிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது. இறுதியாக, 77,505.96 என்ற கணக்கில் முடிவடைந்தது.

சென்செக்ஸ்

இன்றயை நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 746.15 புள்ளிகள் (0.97%) உயர்ந்து 77,505.96 எனவும் நிறைவு பெற்றுள்ளன. மேலும், இன்று 76,833.87 புள்ளிகள் முதல் 77,605.96 புள்ளிகள் வரை வர்த்தகமானது.

நிஃப்டி : 

அதைப்போல, தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 248.75 அல்லது 1.00% புள்ளிகள் உயர்ந்து 23,482.20 ஆகவும் வர்த்தகமாகியது. குறைந்தபட்சம் 23,277.40 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,546.80 என்ற அளவு வரையிலும் சென்றது.

இலாபம் : பட்ஜெட் 2025 தாக்கலின் பின்னர், சில முக்கிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சந்தித்தன. குறிப்பாக, ஹிந்துஸ்தான் யுனிலிவர் (Hindustan Unilever) 3%, மருதி சுசுகி (Maruti Suzuki) 3% உயர்வு, ஹெச்.டி.ஃப்.சி. (HDFC) 1.2% ஆகிய நிறுவனங்கள் உயர்வை கண்டன.

நஷ்டம் : எல் & டி (L&T), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (Bharat Electronics), பவர் கிரிட் கார்ப் (Power Grid Corp), எச்டிஎஃப்சி லைஃப் (HDFC Life) சிப்லா (Cipla), காட்ப்ரே பிலிப்ஸ் இந்தியா (Godfrey Phillips India) 10%, விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் (VST Industries) 6% குறைவு, கோல்டன் டொபாக்கோ (Golden Tobacco) 4.83%, ஐ.டி.சி. (ITC) 3.7% சரிவை கண்டது. ஆகியவை கடும் சரிவை கண்டது.

பட்ஜெட் தாக்கல் குறித்து முதலீட்டாளர்கள் கூறுவது என்ன? 

பந்தோமத் பைனான்ஷியல் சர்வீசஸ் குழுவின் நிறுவனர் மகவீர் லூணாவத் இது குறித்து பேசுகையில் ” பட்ஜெட் 2025 இந்திய மத்தியவர்க்கத்தை எதிர்பார்த்த தாராளமான வரி சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய வரி முறைப்படி ரூ. 12 லட்சம் வருமானம் பெறுவோர் வரியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என நினைக்கிறேன். வரி பிரிவுகளின் புதுப்பிப்பு இதை எளிதாகவும் முன்னேற்றமானதாகவும் மாற்றியமைத்துள்ளது, இது மக்களுக்கு அதிகப்படியான disposable income ஐ அளிக்கும்” எனவும் தெரிவித்தார்.

LKP Securities இன் மூத்த தொழில்நுட்ப அனலிஸ்ட் பேசுகையில் ” நிஃப்டி கடந்த பட்ஜெட் அமலுக்கு பிறகு ரோலர் கோஸ்டரின் போல்  மெதுவாக சென்று கொண்டுள்ளது. எனக்கு தெரிந்து இந்த பட்ஜெட் தாக்கல் காரணமாக நிஃப்டி 23,280 அளவிற்கு ஆதாரம் பெற்று மேல்நிலைக்கு அதாவது ( 23,700–24,000)  வரை உயர முடியும். ஆனால் 23,280-க்கு கீழே விழுந்தால், சந்தையில் பதற்றம் ஏற்படும்” எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்