லாபம் மட்டுமே எங்களது நோக்கம் இல்லை !
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வர்த்தக நிறுவனத்தைப் போல லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கிழக்காசிய கொள்முதல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜேட்லி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். பொதுக் கொள்முதலில், குறிப்பிட்ட அம்சங்களைத் தேர்வு செய்யும் போக்கு ஒரு சாரருக்கு அநீதியை விளைவிக்கக் கூடும் என்பதுடன், முறைகேட்டுக்கும் வழிவகுத்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். அரசின் பொதுக்கொள்முதல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், வேண்டிய நபர்களுக்கு சலுகை காட்டுவது போன்ற முறைகேடுகளைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், ஒரு நாடு தன் குடிமக்களுக்கு நியாயமான விலையில் தரமுள்ள பொருட்களையும், சேவைகளையும் வழங்க முடியும் என்றும் ஜேட்லி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.